திருட்டுத்தனமாக சினிமா பதிவிறக்கம் - வெளிநாடுகள் அபாரம்

கடந்த சில வருடங்களில், தான்சானியா 250 சதவீதமும், அயர்லாந்து 100 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.
திருட்டுத்தனமாக சினிமா பதிவிறக்கம் - வெளிநாடுகள் அபாரம்
x
இந்திய திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்வதில், கடந்த சில வருடங்களில், தான்சானியா (Tanzania) 250 சதவீதமும், அயர்லாந்து 100 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது. சமீபத்தில், ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில், ''பத்மாவத்'' திரைப்படம், திருட்டுத்தனமான பதிவிறக்கத்தில், அதிகமுறை பகிரப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியான நாளில் இருந்து, 157 நாட்களில், சுமார் 73 லட்சத்து 55 ஆயிரத்து 459 பேர், இந்தப் படத்தை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக, Tiger Zinda Hai இந்திப் படத்தினை, 181 நாட்களில், 63 லட்சத்து, 26 ஆயிரத்து 500 பேர், பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் அல்லது ஏதோ ஒரு தியேட்டரில் திருட்டுத்தனமாக, திருட்டு வி.சி.டி.க்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை விட, வெளிநாடுகளில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து, சமூக வலை தளத்தில், பகிர்ந்து விடுகின்றனர். இதன்மூலம், விளம்பரத்தில் தொடங்கி, பகிர்வு வரை, பல கோடி ரூபாய் பணம் பார்த்து விடுகின்றனர். பாலிவுட் படங்களுக்கு உலகளாவிய வரவேற்பு இருப்பதே, திருட்டு பதிவிறக்கத்தை வளர்ச்சியடைய வைத்துள்ளது. 
நியாயமான வெளிநாட்டு வருவாய் பாலிவுட் படங்களுக்கு வெறும் 8 சதவீதம் மட்டும் தான்.ஆனால், திருட்டுத்தனமாக பதிவிறக்கத்தில் கோடி கோடியாக புழங்குவதாக, ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், தான்சானியாவில் திருட்டுத்தனமான இந்தி திரைப்படங்களின் பதிவிறக்கம், 250% அதிகரித்துள்ளது, அயர்லாந்து, ஐரோப்பிய சந்தையில் 100% வளர்ச்சியடைந்துள்ளது. இது மட்டுமின்றி, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, கேமரூன், கென்யா, நைஜீரியா, உகாண்டா, கானா மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள், மாசிடோனியா, ஜெர்மனி, போஸ்னியா, ஹெர்சிகோவினா உள்ளிட்ட நாடுகள், இந்தி திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து, இணைய தளங்களில் உலா வரச் செய்து கொண்டிருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்