கால்கள் இன்றி பிறந்த சிறுமியை நடக்க வைத்த தந்தை

சிரியாவில் பிறவியிலேயே கால்கள் இன்றி முடங்கி கிடந்த தனது குழந்தைக்கு வெளியுலகை காட்டி நடக்க வைத்த தந்தையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கால்கள் இன்றி பிறந்த சிறுமியை நடக்க வைத்த தந்தை
x
சிரியாவில் உள்ள அலெப்பி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது மெர்கி. இவரது மகள் மாயா மெர்கி.  இவள் பிறக்கும் போதே கால் இன்றி பிறந்தாள். பிறவியிலேயே இவளுக்கு முழங்காலுக்கு கீழ் பகுதி இல்லை. இவளால் நடக்க முடியாத காரணத்தினால் இவள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தாள். இதை பார்த்து மனம் வேதனைப்பட்ட அவளது தந்தை முகமது மெர்கி,  மிகவும் மெதுவான பொருட்களால் செயற்கை கால் தயாரித்து ஓரளவு நடக்க உதவினார். அதற்கு அதிக செலவானதால் பிளாஸ்டிக் டியூப்பில் 'டின்கேன்'களை சொருகி கால் தயாரித்து கொடுத்தார். அதன் மூலம்  நடந்த மாயா மெர்கியின் வீடியோ இணைய தளங்களில் வேகமாக பரவி உலக மக்களின் பார்வையை ஈர்த்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்