ஓவியத்தில் அசத்தும் 11 வயது நைஜீரிய சிறுவன்

நைஜீரியா நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் ஓவியத்தில் அபார திறமை பெற்று திகழ்கிறார்.
ஓவியத்தில் அசத்தும் 11 வயது நைஜீரிய சிறுவன்
x
நைஜீரியா நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் ஓவியத்தில் அபார திறமை பெற்று திகழ்கிறார். நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் வசிக்கும் வாரிஸ் கரீம் என்ற 11 வயது சிறுவன், கண்ணால் காண்பதை எல்லாம் தன் தூரிகை மூலம் ஓவியமாக படைக்கும் திறன் பெற்றுள்ளார். இவரது ஓவியத்திற்கு பல தரப்பில் இருந்தும் வரவேற்பு அதிகரித்துள்ளது. உழைக்கும் மக்களின் பெருமையை தன் ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவதாகவும், உலக அளவில் அதனை கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். தன் ஓவியங்களை கொண்டு கண்காட்சி நடத்த வேண்டும் என்பதும் இந்த இளம் ஓவியனின் விருப்பம்... 

Next Story

மேலும் செய்திகள்