இஸ்லாமிய நாட்டினருக்கு விதிக்கப்பட்ட தடை - டிரம்ப் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு, டிரம்ப் அரசு விதித்த தடை செல்லும் என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இஸ்லாமிய நாட்டினருக்கு விதிக்கப்பட்ட தடை - டிரம்ப் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
x
ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன், உள்ளிட்ட 8 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டது. டொனால்டு டிரம்ப் அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த உத்தரவுக்கு கீழமை நீதிமன்றங்கள் தடை விதித்திருந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில்,  4 நீதிபதிகள், டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தனர். இதையடுத்து 8 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மீண்டும் அமலுக்கு வருகிறது. இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உச்சநீதிமன்ற தீர்ப்பை, வரவேற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்