வீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்..?

வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாதல் ஒரு வகையான மனநோய் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்..?
x
உலக அளவில் உள்ள நோய்கள் குறித்த அட்டவணை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வீடியோ கேம்ஸ்களுக்கு அடிமையாதலும் ஒரு வகையான மனநோய் என தெரிவித்துள்ளது. 

அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில், நேரம் காலம் இல்லாமல், மணிக்கணக்கில் வீடியோ கேம்ஸ் விளையாடுவது, மதுவுக்கு அடிமையாதலுக்கு இணையானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கையில் இதர செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளி, வீடியோ கேம்ஸ் மட்டுமே பிரதான நோக்கமாக இருப்பதால் குடும்ப வாழ்க்கை, அலுவலகம், சமூக உறவுகள், கல்வி கற்றல் ஆகியவை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடியோ கேம்ஸ் விளையாடுவதால்  தூக்கமின்மை, போதுமான உணவு உண்ண முடியாத நிலை மற்றும் உடற்பயிற்சியே இல்லாத நிலை உருவாகும் எனவும், இதை குணப்படுத்த, போதை தடுப்பு மருத்துவமனைகளை போல், புதிய மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

வீடியோ கேம்ஸ் திரை முன் அதிக நேரம் செலவழிப்பதால், உடல்நலனை கெடுக்கும் கதிர் வீச்சுகளின் பாதிப்பு அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கேம்ஸ் அதிக நேரம் விளையாடுவதால் சக மனிதர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதும், பழகுவதும் குறைந்து, தனிமை அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் இதை புதிய நோயாக வகைபடுத்தியிருப்பது, மருத்துவ காப்பீடு பெறவும், சரியான சிகிச்சைகளை பெறவும் வழி செய்யும் எனவும் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்