"முடியும் தருவாயில் மண்டலங்கள் சீரமைப்பு பணி" - சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
"முடியும் தருவாயில் மண்டலங்கள் சீரமைப்பு பணி" - சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை
மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதன்படி சென்னை மாநகராட்சி மொத்தம் 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதன்படி 23
சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் 23 மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக பொது மக்கள், மக்கள் பிரதிநிதி மற்றும் சமூக ஆர்வலர்களிடம்
கருத்து கேட்பு பணியும் நடைபெறுகிறது என்றும் இதுகுறித்து விரைவில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story