தலைகீழாக நின்றவாறு பைக் ஓட்டி இளைஞர் உலக சாதனை | CHENNAI | BIKE | WORLD RECORD

x

ஒரு கிலோ மீட்டர் தூரம், இரு சக்கர வாகனத்தை தலை கீழாக ஓட்டி, சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். அசோக் நகர் பகுதியை சேர்ந்த உதயச்சந்திரன் என்பவர் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். சிறு வயதில் இருந்தே இருச்சக்கர வாகனத்தை பயன்படுத்தி சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 5 வருடங்களாக உரிய பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொண்டுள்ளார். தனது தீவிர பயிற்சியின் காரணமாக இன்று பெருங்களத்தூர் GKM சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலைக்கீழாக இரு சக்கர வாகனத்தை இயக்கினார். உதயச்சந்திரன் சோழன் புக் ஆப் வேல்ட் ரெக்கார்டு என்ற அமைப்பு உலக சாதனை படைத்ததாக அங்கிகரித்து, சான்றிதழ் வழங்கியது.


Next Story

மேலும் செய்திகள்