"சீட் பணத்தை வாங்கிதான் மகளுக்கு கல்யாணம் பண்ணனும்" - ஒரு தாயின் கதறல்

ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள குடும்பத்தை கண்டு பிடித்து தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்மல்க புகார் அளித்துள்ளனர்....
x

"சீட் பணத்தை வாங்கிதான் மகளுக்கு கல்யாணம் பண்ணனும்" - ஒரு தாயின் கதறல்

ஏலச்சீட்டு நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள குடும்பத்தை கண்டு பிடித்து தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்மல்க புகார் அளித்துள்ளனர். சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் என ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரை நம்பி 60-க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். சீட்டு முடிய 2 மாதங்கள் உள்ள நிலையில், ஜோதி, அவரது கணவர், மகன், மருமகள் உடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்தனர். ஏலச்சீட்டு நடத்தி ஏமாற்றி தலைமறைவானவர்களை கண்டுபிடித்து, பணத்தை திருப்பி தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்