காணும் பொங்கல் குதூகலம் | "ஏழைகளின் ஊட்டினா.. ஏற்காடு தான்" | ஆனால் இது மட்டும் இல்ல

x

இந்தவகையில் காணும் பொங்கல் தினமான இன்று ஏற்காடுசுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையமான ஏற்காட்டிற்கு நேற்று மாலை முதலே வெளியூர் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கினர். இன்று காலை சேலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஏற்காட்டிற்கு வந்தனர். ஏற்காடு படகு இல்லம், வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம், அண்ணாபூங்கா, மான் பூங்கா, லேடீஸ்சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலையில் கடுமையான குளிர் நிலவியது. அந்த கடும் குளிரோடு இயற்கையின் அழகை மக்கள் பார்த்து ரசித்தனர். மலையில் மேகங்கள் தவழ்ந்து செல்வதுபோல், பனிமூட்டம் காணப்பட்டது. அதனையும் சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர். அனைத்து இடங்களிலும் வழக்கத்தை விட மிக அதிகளவு கூட்டம் காணப்பட்டது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் நம்மிடம் தெரிவிக்கும் பொழுது ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை என்று தெரிவித்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் எற்காட்டில் ஆட்டோ வாடகை விடுதி கட்டணம் பல மடங்கு உயர்வு என்று வேதனையை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்