பிரியாணியால் உடைந்த பெண்ணின் மண்டை....சென்னையில் பரபரப்பு | Chennai

x

சென்னை பட்டினம்பாக்கம் பகுதிக்குட்பட்ட டுமிங் தெருவில், ஒரு சிலர் சாலையில் வைத்து பிரியாணி சமைத்து, அதனை கடைகளுக்கு விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், விறகு அடுப்பில் இருந்து வெளியேறும் புகை, அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வதால், மூச்சு திணறல் மற்றும் புகை மூட்டமாக காட்சி அளிப்பதாகக் கூறி, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், சாலையில் வைத்து பிரியாணி சமைக்கக்கூடாது என எச்சரித்தனர். இதில் கோபமடைந்த அப்பகுதி வாசிகள், புகார் அளித்த கீதா என்ற பெண்ணின் மண்டையை அடித்து உடைத்தனர். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்