ரயில் நிலையத்தில் பெண் வெட்டிக் கொலை... விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்... ஷாக்கான போலீஸ்

x

வானூர் அடுத்த நெமிலி சீனிவாசபுரத்தை சேர்ந்த செல்வம் - காயத்ரி தம்பதி, கடந்த 14ம் ஆம் தேதி தங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் மாயமனது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண்ணை கொலை செய்த சம்பவத்தில், கைதான நபர்களில் ஜெகதீசன், சூர்யா, சக்திவேல் ஆகிய 3 பேரும், கொலைக்கு முன் செல்வம் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்