"நான் ஃப்ரூட்ஸ் சாப்பிட தான் வந்தேன்"ஒற்றை காட்டுயானையால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் வடுகன் தோட்டம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்ட காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது...
x

"நான் ஃப்ரூட்ஸ் சாப்பிட தான் வந்தேன்"ஒற்றை காட்டுயானையால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் வடுகன் தோட்டம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்ட காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் பகுதியில் நாவல், பலா உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. இதனை, உண்பதற்காக வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பழங்களை ருசிக்க வடுகன் தோட்டம் கிராமத்திற்குள் வலம் வந்த ஒற்றை காட்டுயானையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால், வனத்துறையினர், காட்டுயானைகளை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்