"என்னங்க ஒரு நாள் முழுசும் இப்படியா?" ஆத்திரமடைந்த பொதுமக்கள் செய்த செயல்
"என்னங்க ஒரு நாள் முழுசும் இப்படியா?" ஆத்திரமடைந்த பொதுமக்கள் செய்த செயல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, மின் விநியோகம் தடை செய்யப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திம்மநத்தம் பகுதியில், காலை
முதல் இரவு வரை மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு சாலை மறியலில்
ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story