"என்னது நான் கையெழுத்து போட்டேனா"குழந்தைசாமியால் அதிர்ந்துபோன விஏஒ

x

தஞ்சை அருகே மூதாட்டிகளுக்கு சொந்தமான கூட்டு பட்டாவை விஏஓ கையெழுத்தை போலியாக போட்டு விற்ற புகாரில் ஒருவர் கைது செய்யபட்டார்.

பட்டுக்கோட்டை அருகே களத்தூரை சேர்ந்த அய்யம்மாள், லோகம்பாளின் கணவர்களுக்கு சகோதரராக வெற்றிவேல் இருந்துள்ளார்.

வெற்றிவேலின் மகன் குழந்தை சாமிக்கும், அய்யம்மாள் மற்றும் லோகாம்பாளுக்கும் கூட்டாக களத்தூரில் இடம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கூட்டு பட்டாவாக இருந்த சொத்தை, போலி ஆவணம் தயார் செய்து சக்திவேல் என்பவரிடம் குழந்தை சாமி விற்றுள்ளார்.

இது குறித்து அறிந்த மூதாட்டிகள் இருவரும் கிராம நிர்வாக அலுவலரான தனசேகரனிடம் முறையிட்டுள்ளனர்.

நிலத்தின் பத்திர பதிவை தனசேகரன் ஆய்வு செய்ததில் அவரின் கையெழுத்து போலியான போடப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து விஏஓ அளித்த புகாரின் பேரில் குழந்தை சாமியை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்