"தமிழகத்தில் விழா நடந்தால் ஓபிஎஸ்-ஐ அழைப்போம்" அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

x

"தமிழகத்தில் விழா நடந்தால் ஓபிஎஸ்-ஐ அழைப்போம்" அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஜான் பென்னிகுவிக் சிலை திறப்பு விழா தமிழகத்தில் நடந்தால், ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் லண்டனில் பென்னிகுவிக் சிலை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் இருந்து அமைச்சர்

ஐ.பெரியாமி, திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பென்னிகுவிக் சிலை மக்கள் பார்த்து

செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் விழா நடைபெற்றால், ஒ.பி.எஸ்-க்கு அழைப்பு தரப்படும் என்றும் லண்டனில் விழா என்பதால் திமுக

எம்எல்ஏக்கள் சொந்த செலவில் வந்தார்கள் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்