"தமிழ் மொழி​யை நாங்கள் கவனித்து கொள்கிறோம்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை

x

"தமிழ் மொழி​யை நாங்கள் கவனித்து கொள்கிறோம்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை

தமிழ் மொழியை தாங்கள் காப்பாற்றி கொள்வதாகவும், தயவு செய்து, ஆட்சியை கவனியுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என் முதல்வர்

ஸ்டாலினின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முதல்வரின் தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா…? அழுவதா..?

என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

எப்போதெல்லாம் திமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ அப்போதெல்லாம் மொழி பிரச்சனையை எழுப்புவது திமுகவின் திராவிட மாடல் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்