"எங்களுக்கு வீடே வேண்டாம்-ரோட்டிற்கே செல்கிறோம்" நரிக்குறவர் பெண்கள் மீது அத்துமீறும் போதை ஆசாமிகள்

x

"எங்களுக்கு வீடே வேண்டாம்-ரோட்டிற்கே செல்கிறோம்" நரிக்குறவர் பெண்கள் மீது அத்துமீறும் போதை ஆசாமிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பெண்களை கேலி செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நரிக்குறவர் சமூகத்தினர், வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றபோது, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அத்துமீறி நடந்துள்ளனர். அதனை அப்பெண்ணின் உறவினர்கள் தட்டிக் கேட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அத்துமீறும் போதை ஆசாமிகள் குறித்து பலமுறை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டி, 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் பெண்கள், பழனி தாலுக்கா அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது தங்களது குடும்ப அட்டைகளை, வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தனர். உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்