மருத்துவமனையில் நோயாளி தூக்கி வீசப்பட்டாரா? சிசிடிவி. காட்சிகளை வெளியிட்ட டீன்

x

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர், தோல் சம்பந்தமான பாதிப்புக்காக சிகிச்சை பெற நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். 2 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், மீண்டும் பணிக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். அவரால் நடக்க முடியததால் மருத்துவமனைக்கு வெளியே சிறிது தூரத்தில் சாலையோரம் அமர்ந்துள்ளார். அவரைக் கண்ட அப்பகுதி மக்கள், மீண்டும் 108 ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அவரை மருத்துவமனை ஊழியர்களே வெளியே இழுத்துச் சென்று போட்டதாக ஊடகங்களில் தவறான செய்தி வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி, சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், மருத்துவமனையில் இருந்து ராஜமாணிக்கும் நடந்து சென்றது தெரியவந்தது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜமாணிக்கத்தை சாந்தா அருள்மொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்து, முழுமையாக குணமடையும் வரை சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்