கோவை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்த எச்சரிக்கை

x

குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும் என்றும், காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன அறிகுறிகளாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி​யுள்ளது. குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து, பின் ஆறவைத்து குடிக்க வேண்டும் என்றும், தொண்டையில் கரகரப்பு இருந்தால் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இருமல் மற்றும் தும்மலின்போது, வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும் - அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்