எச்சரிக்கை..! அருவியில் ஆபத்து..!ஏற்கனவே 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்து சென்றனர்

x

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

5-ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. கடந்த நான்கு நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாமல் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. இன்று காலையிலும் கடும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. இதனால் இன்று ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது குறைவாக சுற்றுலா பயணிகளே குற்றாலத்தில் உள்ளனர். குளிர்ச்சியான சூழல் இங்கு நிலவுவதால் அதனை அனுபவித்து வருகிறார்கள். அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்