சென்னை இளைஞர்களுக்கு எச்சரிக்கை மணி...கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கே அதீத அபாயம்

x

காற்று மாசு மற்றும் மாறிவிட்ட வாழ்க்கை முறைகளால் தலைநகர் சென்னையில், வறண்ட விழி நோய் பாதிப்பு 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...

காற்று மாசு, சூடான வெப்ப நிலை, கடுமையான பணிச் சூழல், டிஜிட்டல் திரைகளை வெகு நேரம் பார்ப்பது என சென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கை தலைகீழ் மாற்றம் அடைந்திருக்கிறது. இந்த மாற்றமே, பெரும் பாதிப்பிற்கான அறிகுறியாக மாறியுள்ளது என எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது....

சென்னையில் காற்றில்PM2.5 நுண்துகள்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது , காற்று மாசு தர குறியீட்டு அளவு 50 ஐ கடந்து பதிவாகியுள்ளது.உலக சுகாதார நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற அளவையும் விஞ்சி நிற்கும் இந்த நிலை ஆபத்தான கட்டத்தின் அறிகுறியாகும். இவைகளோடு வெப்பமான பருவநிலையும், காற்றில் அதிக ஈரப்பதமும், இணையும் போது நமக்கே தெரியாமல் உடல் பாதிக்க துவங்குகின்றதுஇதைத் தவிர மொபைல், கணினி, டிவி திரைகள் என நாள் கணக்கில் டிஜிட்டல் திரைகளை உற்று நோக்குவதால் கண் சிமிட்டல் வெகுவாக குறைகிறது இதனால் கண் மேற்பரப்பின் ஆரோக்கியம் பாதிப்படைந்து டிஜிட்டல் கண்ணழுத்தம் ஏற்படுகிறது. நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாமை, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் இளைஞர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயை எதிர்க்கும் திறனும் குறைந்துள்ளது.

இது போன்ற பல காரணங்களால் கண்ணில் ஏற்படும் வறட்சியை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறது இன்றைய இளைஞர் கூட்டம். இந்த அறியாமையே, உலர் விழி நோய்க்கான முதல் காரணியாக மாறியுள்ளது. கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க போதுமான அளவு கண்ணீரை கண் சுரப்பிகள் தயாரிக்க வேண்டும், ஆனால் அந்த வேலை சரிவர நடைபெறாத போது உலர் விழி நோய் ஏற்படுகிறதுதற்போது சென்னையில் 50 சதவீத உயர்வை எட்டியுள்ள இந்த நோய், பார்வையை இழக்கும் நிலைக்கு கூட தள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.


Next Story

மேலும் செய்திகள்