அடுத்தடுத்து அதிர்ந்த பூமி... வெடித்து சிதறிய எரிமலை..! அலறியோடும் மக்கள் - திக் திக் காட்சி

x

தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று முன்தினம் எரிமலை வெடித்து, நெருப்பு குழம்பை கக்க தொடங்கியது. பல வாரங்கள் தீவிர நில அதிர்வுகளுக்கு பின்னர், எரிமலை வெடித்த நிலையில், 330 அடிக்கும் அதிகமான உயரம் வரை எரிமலை புகையை காற்றில் கக்கியது. பின்னர், நெருப்பு குழம்பை எரிமலை கக்கி வந்த நிலையில், அதன் தீவிரம் தற்போது குறைந்துள்ளது. எனினும், எரிமலைக்கு அருகே உள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, நெருப்பு குழம்பை வெளியிட்டு வரும் எரிமலையின் ட்ரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்