ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து - பூமிக்குள் புதைந்திருக்கும் பூகம்பம்... வெளியான அதிர்ச்சி தகவல்

x

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டு, 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்ட கனிம வள துணை இயக்குனர் தங்க முனியசாமி தலைமையில், அதிகாரிகள் குவாரியை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது ஆவியூர் கல்குவாரியில் விதிகள் மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பாறைகளை தகர்ப்பதற்காக வெடி மருந்துகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதிக ஆழத்தில் வைத்துள்ளதால் அதை அப்புறப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்த பின்பு, குவாரியில் உள்ள வெடிகள் வெடிக்க வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்