கும்கி யானையை குளிப்பாட்டும் சிறுவர்கள் வைரல் வீடியோ

x

கும்கி யானையை குளிப்பாட்டும் சிறுவர்கள் வைரல் வீடியோ

பொள்ளாச்சியை அருகே உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், கும்கி யானையை 3 சிறுவர்கள் குளிக்க வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த முகாமில்,

வெயில் காரணமாக ஆற்றுப் படுகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாரியப்பன் என்ற கும்கி யானையை மலைவாழ் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உடல் முழுவதும்

சேற்றைப் பூசி, தேங்காய் நார்களைக் கொண்டு தேய்த்துக் குளிப்பாட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அந்த யானையும் ஒய்யாரமாக எந்த அசைவும் இல்லாமல் படுத்திருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்