தொழிற்சாலையிலிருந்து வெளியான நச்சு புகை... 28 பேர் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி..

x

விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு பகுதியில் இயங்கி வரும், தனியார் மாற்று எரிசக்தி பொருள் தயாரிக்கும் நிறுவனத்தால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வந்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், நாடாளுமன்ற தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். இந்நிலையில் தொழிற்சாலையில் இருந்து நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசியதால், 28 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 28 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவனத்திற்கு சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. தற்காலிகமாக இல்லாமல் தொழிற்சாலைக்கு நிரந்தரமாக சீல் வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்