வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட கிராம உதவியாளர்....பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

x

வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட கிராம உதவியாளர்....பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை

கடலூரில் வாரிசு சான்றிதழுக்காக லஞ்சம் பெற்ற கிராம உதவியாளர் கைதாகியுள்ளார். கடலூர் மேல்பாதியை சேர்ந்த ஜெயலட்சுமி, வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நிலையில், சான்றிதழ் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ஜெயலட்சுமியின் சகோதரர் ரவி, விஏஓ அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது கிராம உதவியாளரான பாட்ஷா என்ற முஜிப்பூர் ரஹ்மான், 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்படவே, அவர்களின் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாயை ரவி, பாட்ஷாவிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் பட்ஷாவை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்