ரொம்ப அர்ஜென்ட்... ஆன்லைனில் அனுப்புங்க.. உரிமையாளருக்கு டிமிக்கி கொடுத்து..! பைக்கில் பறந்த மாடல் திருடி..வெளியான பகீர் சிசிடிவி காட்சி

x

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் அய்யன்சேரி பகுதியை சேர்ந்த ஷெரில்கன் சால்வெஸ்‌ என்ற இளம்பெண், தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள செல்போன் கடைகளில், அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாகவும், தான் சொல்லும் செல்போன் எண்ணிற்கு பணம் அனுப்புமாறு கூறி பாவனை காட்டியுள்ளார். அதன்படி, கடைக்காரர் பணத்தை அனுப்பியவுடன், ரொக்கமாக பணம் கொடுக்காமல், பாதி பணத்தை கொடுத்துவிட்டு, மீதியை ஆன்லைனில் அனுப்புவதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளார். அதேபோல் ஆன்லைனில் பணம் அனுப்பியதுபோல், போலியாக செல்போன் ஸ்கீரீன் ஷாட் காண்பித்துவிட்டு, தயாராக இருக்கும் காதலனின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதே அந்த இளம்பெண்ணின் வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரத்தில் உள்ள செல்போன் கடையில் அதே பாணியில் ஏமாற்ற முயன்றபோது, இளம்பெண்ணை பொதுமக்கள் கையும்களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்