"தமிழகத்தை அதிர வைத்த வென்டிலேட்டர் மரணம்.." - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம்

x

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், மின்தடை ஏற்பட்டு வென்டிலேட்டர் கருவி செயலிழந்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அமராவதி, நுரையீரல் பாதிப்பு காரணமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, அவசர சிகிச்சைப் பிரிவில் மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் செயலிழந்ததாகவும், அமராவதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ், காச நோயால் அமராவதிக்கு நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், ஏழு நிமிடத்தில் மின்தடை சரிசெய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். அமராவதிபோல் வெண்டிலேட்டர் வைக்கப்பட்ட 4 பேர் நலமுடன் இருப்பதாகவும், இவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

--


Next Story

மேலும் செய்திகள்