தொழிலதிபரை கடத்தி மிரட்டிய விஏஓ..! காட்டிக்கொடுத்த ஜி.பி.எஸ்!

தொழிலதிபரை கடத்தி மிரட்டிய விஏஓ..! காட்டிக்கொடுத்த ஜி.பி.எஸ்!
x

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தொழிலதிபரை கடத்தி 80 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கீரனூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், காலையில் நடைபயிற்சி செல்லும் போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து, சந்திரசேகர் மூலமாகவே அவரது மகன் மணிகண்டனை தொடர்பு கொண்டு 80 லட்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் துரிதமாக செயல்பட்ட போலீசார் சந்திரசேகரின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து திருச்சிக்குச் சென்று சந்திரசேகரை மீட்ட போலீசார், நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில் கடத்தலுக்கு களமாவூர் பகுதி விஏஓ திருவேங்கடம் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. ஏற்கனவே திருவேங்கடத்திற்கும் சந்திரசேகருக்கும் இடையே முன்விரோதமும் இருந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்