பேரிகார்டால் ஏற்பட்ட பிரச்சினை! வழக்கறிஞர்,வியாபாரிகள் இடையே பயங்கர மோதல்!
பேரிகார்டால் ஏற்பட்ட பிரச்சினை! வழக்கறிஞர்,வியாபாரிகள் இடையே பயங்கர மோதல்! | வண்ணாரப்பேட்டை
சென்னை வண்ணாரப்பேட்டையில் தீபாவளியை முன்னிட்டு வைக்கப்பட்ட பேரிகார்டால் மோதல் ஏற்பட்டது. எம்சி சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிக்கடை இருப்பதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் துணிகள் வாங்க குவிந்தனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க அந்த பகுதியில் பேரி கார்டு வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்ற வேண்டும் என திமுக வழக்கறிஞர் பிரிவை சார்ந்த நாதன் என்பவர் தெரிவித்ததால் அவருக்கும், வியாபாரிகள் சங்க தலைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, திமுக வழக்கறிஞர் வியாபாரிகள் சங்க தலைவரை தாக்கியதாகவும், அவரை கைது செய்யக்கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடு்பட்டதால் பரபரப்பு ஏறபட்டது.
Next Story