வந்தே பாரத் ரயிலால் ஓரம் கட்டப்படும் - ஆம்னி பேருந்துகள் ?

x

சென்னை நெல்லை இடையே இயக்கப்படக்கூடிய வழக்கமான வந்தே பாரத் ரயில் சேவையுடன் கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் தீபாவளியை ஒட்டி இயக்கப்படுகிறது... இன்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதால் தீபாவளி பண்டிகையை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 தேதிகளிலும், அதேபோல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது... ஆம்னி பேருந்துகளைக் காட்டிலும் குறைவான விலையில், விரைவாகவும் சொகுசாகவும் பயணம் செய்ய முடிவதால் ஆம்னி பேருந்துகளுக்கு பதிலாக சிறப்பு வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் பெரும்பாலான தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீராத சூழலை பார்க்க முடிகிறது...


Next Story

மேலும் செய்திகள்