கணவன் சரிவர கவனிக்காததால் நிறைமாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

x

கணவன் சரிவர கவனிக்காததால் நிறைமாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வெள்ளாட்டம் பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவருக்கும் அதேப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் கடந்த வருடம்

திருமணம் நடைபெற்றுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான சத்தியாவை அவரது கணவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால்

ஆத்திரமடைந்த சத்தியா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பட இடத்திற்கு சென்ற மலையம்பாளையம் போலீசார்

பிரேதத்தை கைப்பற்றி , ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்