எதிர் எதிரே உணவகம்.. எதிரியான ஓனர்கள்.. கல்லால் காதில் விழுந்த கொடூர அடி - வெளியான திக் திக் காட்சி

x

சென்னையை அடுத்த மாங்காடு அருகே, தொழில் போட்டியில் உணவக உரிமையாளரை கல்லால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில், காந்தி ராஜ் மற்றும் நவப்பிரகாஷ் ஆகியோர், எதிர் எதிரே உணவகம் நடத்தி வந்துள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, நவப்பிரகாஷ், காந்திராஜை கல்லால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் புகார் அளித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்