"வெற்றி பெற்றதால் ஆத்திரம், காங். தலைவர் மீது பாஜகவினர் தாக்குதல்" - ராகுல் காந்தி கடும் கண்டனம்

"வெற்றி பெற்றதால் ஆத்திரம், காங். தலைவர் மீது பாஜகவினர் தாக்குதல்" - ராகுல் காந்தி கடும் கண்டனம்
x

திரிபுராவில் காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜவினர் நிகழ்த்திய தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 3 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே அகர்தலா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிராஜித் சின்ஹா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் வெற்றி பெற்றதால், காங்கிரஸ் காரர்கள் மீது பாஜகவினர் நடத்திய கொடூரமான தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தங்களுடன் இருப்பதாகவும், போலீசார் தாக்குதலை தடுக்காமல் வாய்மூடி நின்றது வெட்கக்கேடானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்