ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொண்ட கும்பல்-நள்ளிரவில் வெடித்த மோதல்-திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்
திருச்சி- கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினருடைய பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டதில் நெப்போலியன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், படுகாயங்களுடன் 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில், கதிரவன் என்ற இளைஞர் இன்று காலை உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் முக்கிய நபர்கள் வெளியே இருப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
