"போக்குவரத்து மாற்றம்" - சென்னை மக்கள் கவனத்திற்கு

x

அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான சோதனை ஓட்டம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா எதிரே உள்ள ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அண்ணா சாலை முதல் ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம் எனவும் ஒயிட்ஸ் சாலை முதல் ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்டுல்லாஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை டூ பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. அண்ணா சாலை டூ பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்