வீட்டில் தனியாக இருந்த திருநங்கை.. வெட்டுக் காயங்களுடன் மீட்பு.. ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு.!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீட்டில் தனியாக இருந்த திருநங்கை வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
x

வீட்டில் தனியாக இருந்த திருநங்கை.. வெட்டுக் காயங்களுடன் மீட்பு.. ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு.! வெட்டுக் காயங்களுடன் திருநங்கை மீட்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீட்டில் தனியாக இருந்த திருநங்கை வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள, ஏரிக்கரையின் டாஸ்மாக் கடை அருகே பார்கவி என்ற திருநங்கை வசித்து வந்தார். இந்நிலையில், இவர் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அங்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்