கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்.. லாரி மீது மோதி தூக்கிவீசப்பட்ட இளைஞர்

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் குமரன்குன்று பகுதி அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளார். இதில் சதீஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்