சொரிமுத்து அய்யனார் கோவிலில் சோகம் - தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் பலி

x

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வந்த சிறுவர்கள், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு, சரவணன் மற்றும் விஷ்ணு குமார் குடும்பத்தினருடன் சென்றனர். இந்தநிலையில் திடீரென மாயமான சரவணனின் மகன் கார்த்திக்கும், விஷ்ணு குமாரின் மகன் ஹரிஷ் குமாரும், கோயிலுக்கு எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றில் சடலமாக மிதந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்