வாழைத்தாரில் ரசாயனம் கலக்கும் வியாபாரி - இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

x

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, வாழைத்தாரில் ரசாயனம் கலக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் பகுதியில் இயக்கி வரும் கடை ஒன்றில், வாழைத்தார்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காக, ரசாயன கலவையை வியாபாரி ஒருவர் தெளித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், திருச்சிற்றம்பலம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்