தக்காளி விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய விலை.. - ஒரே மாதத்தில் இப்படியா?

x

கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கும் அதிக விலையில் விற்கப்பட்ட தக்காளி, இன்று 10 ரூபாய்க்கும் கீழே சரிந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் உள்ள தக்காளி சந்தைகளில், கடந்த மாதம் தக்காளி வரத்து குறைவாக இருந்தால், கிலோ ௧௨௦ ரூபாய் முதல் 130 வரையில் விற்பனை ஆனது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள தக்காளி சந்தைகளுக்கு தக்காளி வரத்து திடீரென அதிகரித்தது. இதனால், கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்த தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.

தற்போது ௧௫ கிலோ கொண்ட தக்காளி பெட்டி 100 ரூபாய் முதல் ௧௩௦ ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் கீழே சரிந்துள்ளது. நாளுக்கு நாள் தக்காளி வரத்து அதிகரித்து வருவதால், விலை மேலும் வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது கிடைக்கும் விலை தக்காளி செடியின் பராமரிப்பு செலவுக்கு கூட போதவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்