இன்றைய தலைப்பு செய்திகள் (14-08-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, எத்தனை மாணவர்கள் பலியானாலும் ஆர்.என்.ரவி போன்றவர்களின் இதயம் கரையப் போவதில்லை என காட்டமாக விமர்சித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்... செய்தியாளர்கள் மீரான், தாயுமானவன் வழங்கிய தகவல்கள் இவை...

தாயுமானவன், நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சூழலில், நீட் விலக்குக்காக தற்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? கூடுதல் விவரங்கள் சொல்லுங்க.

சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மையிலேயே நடைபெற்ற சம்பவம் என்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தெரிவித்துள்ளார். அதேசமயம், அந்த சம்பவத்தின்போது ஓ.பி.எஸ் அவையிலேயே இல்லை என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, தமது வழக்கு ஆவணங்களை கோரிய, அமைச்சர் செந்தில்பாலஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்றைய முக்கிய அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறார் செய்தியாளர் சமயமணிவண்ணன்...

டேராடூனில் வெள்ளப்பெருக்கால் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட கல்லூரி கட்டிடம்...


Next Story

மேலும் செய்திகள்