செஸ் ஒலிம்பியாடில் இன்று சுவாரஸ்ய ஆட்டம்.. நேருக்கு நேர் மோதும் முக்கிய அணிகள்

இன்று நடைபெறும் ஏழாம் சுற்று ஆட்டத்தில், இந்திய அணிக்கு எதிராக இந்திய அணியே மோதிக்கொள்ளும் சுவாரஸ்ய போட்டி நடைபெற உள்ளது...
x

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7ம் சுற்று ஆட்டத்தில், இரண்டு இந்திய அணிகள் இன்று நேருக்கு நேர் மோத உள்ளன.

மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஏழாம் சுற்று ஆட்டத்தில், இந்திய அணிக்கு எதிராக இந்திய அணியே மோதிக்கொள்ளும் சுவாரஸ்ய போட்டி நடைபெற உள்ளது.ஓபன் பிரிவில், இந்தியா A மற்றும் C அணிகள் இன்று மோதுகின்றன. அதே சமயம் கியூபா அணியுடன் இந்தியா B அணி இன்று மோதவுள்ளது. மகளிர் பிரிவில் அஜர்பைஜான் உடன் இந்தியா A அணியும், கிரீஸ் உடன் இந்தியா B அணியும், சுவிட்சர்லாந்துடன் இந்தியா C அணியும் மோதுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்