இன்றைய தலைப்பு செய்திகள் (19.09.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்...

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் - குழப்பம்...மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் - குழப்பம்...மசோதா ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பதிலால் பரபரப்பு...

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு எப்போது?பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் 2024 தேர்தலில் நடைமுறைப்படுத்த முடியாது என தகவல்...பழங்குடி மற்றும் பட்டியல் இனத்தவருக்கான தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டு, தொகுதி மறு வரையறை செய்யப்பட்ட பிறகே நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்ப்பு

"2010-லேயே நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா" மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2010 ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது...மாநிலங்களவையில் காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

பல கட்சிகளும், படிக்காத பெண்களை தேர்வு செய்து அவர்களை செயலாற்ற விடாமல் செய்து விடுவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார்..பாஜகவில் அனைத்து பெண்களும் அதிகாரத்துடன் உள்ளதாகவும் பெண்களிடையே பாகுபாடு பார்க்கும் போக்கை கைவிட வேண்டும் என்றும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி


Next Story

மேலும் செய்திகள்