இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2023)

x
  • நிலவில் மைனஸ் 200 டிகிரியில் உறைந்திருக்கும் லேண்டர், ரோவரை தட்டி எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ மும்முரம்.........சூரிய கதிர்கள் விழத்தொடங்கிய நிலையில், இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை என விஞ்ஞானிகள் தகவல்........
  • இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு கட்டப்பட்ட தனி வீடுகள்...காணொளி மூலம் மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...
  • சென்னையில், அக்டோபர் 14ம் தேதி திமுக மகளிரணி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்...காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு அழைப்பு...
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்...திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி மகளிருக்கு தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் வாழ்த்து கடிதம் எழுதியுள்ள முதல்வர்...
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க, டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள்...பாஜக - அதிமுக இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அதிமுகவினர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்..
  • டெல்லியில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு...அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சித்து வருவது குறித்து புகார் தெரிவித்ததாக தகவல்....

Next Story

மேலும் செய்திகள்