போலீசாரை தாக்கிய ரவுடி... ``ரவுடியே இல்லை.'' ``கால் உடைந்தவன்... எப்படி ஓடுவான்..?'' ``என் குடும்பத்தையே நாசம் பண்ணிட்டாங்க..'' அதிர வைத்த துப்பாக்கி சூடு ரோகித் ராஜ் பாட்டி அதிர்ச்சி பேட்டி

x

சென்னையில் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி ரோகித் ராஜ் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவுடி ரோகித் ராஜ், 16 வயது முதலே சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும், 2015-ம் ஆண்டு டிபி சத்திரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல ரவுடியாக திகழ்ந்து வந்த ஜெயராஜின் வலதுகரமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

யார் பெரியவன் என்ற பஞ்சாயத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜெயராஜ், தீச்சட்டி முருகனை கொன்ற நிலையில், இதற்கு பழி வாங்க காத்திருந்த ரோஹித் ராஜ், பிரபல ரவுடி மதுரை பாலாவுடன் கூட்டணி சேர்ந்து தீச்சட்டி முருகன் மற்றும் ரவுடி சிவகுமாரை வெட்டிக் கொன்றதும்,

2022-ம் ஆண்டு அமைந்தகரையில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி பைனான்சியர் ஆறுமுகத்தை கொன்றதும் தெரியவந்துள்ளது.

மாமூல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரோகித் ராஜ், மாமுல் தராதவர்களை நேரடியாக சென்றும், செல்போனிலும் தொடர்ச்சியாக, நான் தான் பெரிய ரவுடி எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

ரவுடி மதுரை பாலா சிறைக்குச் சென்ற பின், பல்வேறு சமூக விரோத செயல்களில் ரோகித் ராஜ் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த ரோகித் ராஜ், தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தனது பேரன் ரோகித் ராஜ் ரவுடியே கிடையாது என்றும், கால்களை ஏற்கனவே உடைத்த நிலையில் அவனால் எப்படி தப்பித்து ஓட முடியும்? என்றும் ரோகித் ராஜின் பாட்டி, காணிக்கை மேரி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடி ரோகித் ராஜை, பெண் எஸ்.ஐ. சுட்டுப்பிடித்தார்.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ரோகித் ராஜ் மீது, பிரபல ரவுடி மயிலை சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் ஆகியோர் கொலை வழக்கு உட்பட 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த ரவுடி ரோகித் ராஜ், தேனியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.

பின்னர் ரோஹித் ராஜை சென்னைக்கு அழைத்து வந்து சேத்துப்பட்டு பகுதியில் விசாரித்தனர். அப்போது போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு ரோகித் ராஜ் தப்பியோட முயன்ற நிலையில்,

பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, தற்காப்புக்காக துப்பாக்கியால், வலது கால் முட்டியில் ரோகித் ராஜை சுட்டுப்பிடித்தார்.

ரோகித் ராஜ் கத்தியை எடுத்து வெட்டியதில் தலைமை காவலர்கள் சரவணகுமார் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. காலில் காயமடைந்த ரோகித் ராஜ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

காயமடைந்த இரு தலைமை காவலர்களும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

துணிச்சலாக செயல்பட்ட உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்