ரஷ்யா சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்- தமிழகம் திரும்பியதும் சொன்ன வார்த்தை

x

ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு "ராக்கெட் அறிவியல் கல்வி பயணம்" சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை திரும்பினர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி, சிவதாணுபிள்ளை தலைமையில் சென்னை அகத்தியம் அறக்கட்டளை மற்றும் URSAGO SOLLUTIONS சார்பில் 11 மாவட்டங்களில் 25 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள், 20 ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய குழு கடந்த 20ம் தேதியன்று ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அறிவியல் கல்வி பயணம் மேற்கொண்டனர். கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுகணை ஏவு தளத்தைப் பார்வையிட்டு, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர்... இந்த குழு வெற்றிகரமான பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில், மாணவர்களை குடும்பத்தினர் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்... பல நாள் கனவு நனவானதாய் அரசுப் பள்ளி மாணவர்கள் உற்சாகம் பொங்க பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்