ஆயுதமாக மாறிய கோயில் அரிவாள்.. அழுது கதறிய பெண்..நள்ளிரவில் சுடலை மாடன் கோயில் திக்.. திக்..

x

திருச்செந்தூர் அருகே நங்கைமொழி கிராமத்தில் சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழாவின் போது இளைஞர்கள் சிலர் ராட்சத அரிவாளுடன் ஒருவரை வெட்ட முயலும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... இரவு 12 மணியளவில் இருதரப்பாக இளைஞர்கள் மோதிக் கொண்ட நிலையில், ஒருவர் ராட்சத அரிவாளுடன் ஒருவரை ஆக்ரோஷமாக வெட்ட வந்துள்ளார்... அப்போது ஒரு பெண் அந்த இளைஞரை வெட்ட விடாமல் தடுத்து கெஞ்சினார்... மற்றொரு இளைஞர் பெரிய கல்லைக் கொண்டு கீழே விழுந்து கிடந்தவரை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த நபரும் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் பதிவான பதைபதைக்க வைக்கும் காட்சிகளைப் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்