சாலையோரம் இரவில் உறங்கிய பெண்ணின் குழந்தை கடத்தல்? யாசகம் பெற்று வாழ்ந்து வந்த பெண் கதறல்

x

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து அவரின் நான்கு மாத பெண் குழந்தையை மர்மநபர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படும் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை சேர்ந்த சந்தியா என்பவர், தூத்துக்குடி, அந்தோணியார் கோவில் அருகேயுள்ள வி.இ.ரோட்டில்... தனது 4 மாத பெண் குழந்தையுடன் தங்கி யாசகம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு சாலையோரம் உறங்கி கொண்டிருந்த சந்தியாவிடம் இருந்து அவரின் 4 மாத பெண் குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்றதாக கூறப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்