தந்தையை சீண்டியவர்களை தட்டிக்கேட்டஅரசியல்வாதி மகன் கோர கொலை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இடத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்ட ம.தி.மு.க நிர்வாகியின் மகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருத்துறைப்பூண்டி ம.தி.மு.க நகர செயலாளர் மோகன், மன்னார்குடி சாலையில் இருந்த இடத்தை அளந்து வேலி அமைக்க சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து மகன் அருளிடம் தெரிவித்துள்ளார். கோபம் அடைந்த அருள், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று லாரி பட்டறை உரிமையாளர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, கல்லால் தாக்கப்பட்ட ம.தி.மு.க நிர்வாகியின் மகன், தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக லாரி பட்டறை உரிமையாளர்கள் ஸ்ரீராம், விக்னேஷ் ஆகிய இருவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
